யாழ்ப்பாணத்தில் வசமாக மாட்டிய மோட்டார் சைக்கிள் திருடன் !!

0

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வர்த்தக நிலையமொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்ச் சைக்கிளொன்றைத் திருட முற்பட்ட குற்றச்சாட்டில் நபரொருவர் வர்த்தகர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று(04)பிற்பகல் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக்கடையொன்றில் பணி புரியும் ஊழியரொருவர் தனது மோட்டார்ச் சைக்கிளை வீதியோரம் நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த மோட்டார்ச் சைக்கிளை இனம் தெரியாத நபரொருவர் உருட்டிச் சென்றுள்ளான்.

அப்பகுதியில் அருகிலிருந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் குறித்த நபரின் செயல்களால் சந்தேகமடைந்து விசாரித்துள்ளார். அப்போது அவர் குறித்த மோட்டார்ச் சைக்கிள் தன்னுடையது எனவும், எரிபொருள் தீர்ந்துவிட்டமையால் எரிபொருள் நிரப்பச் செலகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும்,சந்தேகம் குறையாத வர்த்தக நிலைய உரிமையாளர் அயலிலுள்ள வர்த்தக நிலையங்களில் நின்றவர்களையும் வரவழைத்து விசாரித்துள்ளார். இதற்கிடையே மோட்டார்ச் சைக்கிளின் உரிமையாளரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் மோட்டார்ச் சைக்கிள் உரிமையாளருடனும் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்பின்னர் மோட்டார்ச் சைக்கிளின் உரிமையாளர் மேற்படி மோட்டார்ச் சைக்கிள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துக் காட்டித் தனது மோட்டார்ச் சைக்கிளைப் பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு திருட்டுச் சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படடார்.

Leave A Reply

Your email address will not be published.