வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்களுக்கு நேர்ந்த கதி.!

0

வடக்கு கடற்படைத் கட்டளைத் தலைமையகத்தினால், நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட விஷேட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரை தீவுகளின் வடக்கு கடல்பகுதியில் மீன்பிடிப் படகு ஒன்றுடன், இந்திய மீனவர்கள் 5 பேரும், நெடுந்தீவுகளின் மேற்கு கடல் பகுதியில், இரண்டு மீன்பிடிப் படகுகளுடன் 8 இந்திய மீனவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்திய மீனவர்களை கடற்படையினர் வைத்திய சோதனைக்கு உட்படுத்தியப்பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று இந்த வருடத்தில் ஆரம்பம் முதல் தற்போது வரை இலங்கை கடல் பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட, இந்திய மீனவர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஜந்து மீன்பிடிப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டத்திற்கு புறம்பான முறையில் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிகளை மேற்கொள்ளும் நபர்கள் தொடர்பாகவும், மேற்படி சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும், கடற்படையினர் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.