வடமாகாணம் தொடர்பில் ளெிவந்துள்ள அதிர்ச்சித் தகவல்!

0

வடமாகா­ணத்­தில் கடந்த 10 நாட்க­ளில் 380 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவத்த பொலிஸார் அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்­ள­னர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவில் 90 சத­வீ­த­மானவை யாழ்ப்பா­ணத்­தி­லேயே மீட்­கப்­பட்­டுள்­ள­தா­க வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷாந்த் பெர்னாண்டோ தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“வடக்கு மாகா­ணத்­தில் கடந்த 10 நாட்க­ளில் யாழ்ப்­பா­ணத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும், மன்­னார் மற்­றும் கிளிநொச்சி மாவட்டங்க­ளி­லும் பெருந்­தொ­கை­யான கஞ்சா கைப்பற்றப்பட்டது.

வவு­னியா மாவட்­டத்­தில் குறைந்­த­ளவு கஞ்சா மீட்­கப்­பட்­டது.

வல்­வெட்­டித்­துறை மற்­றும் பருத்­தித்­து­றைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் மாத்­தி­ரம் 200 கிலோ­வுக்­கும் அதி­க­மான கஞ்சா மீட்­கப்­பட்­டது.

இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என யாழ்ப்­பா­ணத்­தில் 29 பேரும், வவு­னி­யா­வில் 4 பேரும், மன்­னா­ரில் 4 பேரும், கிளி­நொச்­சி­யில் 3 பேரு­மாக 40 பேர் கைது செய்­யப்­பட்­டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.