வவுனியாவில் அரச உத்தியோகம் புரியும் பெண்ணை கட்டிப்பிடிக்க முயன்ற காவாலி கிராம சேவகர் !

0

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமசேவையாளர் பிரிவில் பெண்ணை கட்டிப்பிடிக்க முயன்ற குற்றச்சாட்டில் கிராம சேவையாளர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கிராம சேவையாளர் அலுவலத்தில் கடமை நேரத்தில் வைத்து அவரை (கிராம சேவையாளரை) சந்திக்க சென்ற அரச உத்தியோகத்தர் ஒருவரை கிராம சேவையாளர் கட்டிப்பிடிக்க முயன்றுள்ளார்.

இவ்விடயம் தொடர்பான புகைப்பட ஆதாரத்துடன் அப்பகுதி மக்கள் வவுனியா பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து வவுனியா பிரதேச செயலகத்தினால் விசாரணைகள் முன்னேடுக்கப்பட்டது.

இதன் பிரகாரம் விசாரணைகள் முடிவூறும் வரை தற்காலிகமாக குறித்த கிராம சேவையாளருக்கு வவுனியா பிரதேச செயலகத்தினால் வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு வினாவிய போது ,

குறித்த விடயம் தொடர்பாக எமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வருவதினால் தற்காலிகமாக குறித்த கிராமசேவையாரை வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னரே முழுமையான விடயங்களை தெரிவிக்க முடியுமேன தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.