விரைவில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கல் தொடர்பில் எதிர்ப்பு மகஜர்!

0

இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தி தமிழ் அரசியல்கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் போன்ற தரப்புகள் மகஜர் ஒன்றை கையளிக்க எடுத்துள்ள நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும் ரெலோ அமைப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் ரெலோ அமைப்பின் செயலாளர் என்.சிறிகாந்தா, தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் உள்ளிட்ட குழுவினர், தொடர்ச்சியாக எல்லா கட்சிகளையும் சந்தித்தனர்.

இந்த நிலையில் கடந்த 25ம் திகதி இரவு புளொட், தமிழரசுக்கட்சியின் தலைவர்களை இந்த குழுவினர் சந்தித்தனர்.

காலஅவகாசம் வழங்கக்கூடாது என்ற அறிக்கையில் கையெழுத்திடுவதை பற்றி மவை சேனாதிராசா எதையும் பேசவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்வதாக கூறியிருந்தார்.

இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக்கூடாது என்ற கடிதத்தை வரும் 6 அல்லது 7ம் திகதிகளில் ஐ.நா பொதுச்செயலாளரிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் தமிழரசு கட்சி சார்பில் எந்தவித உத்தியோகபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.