வெட்கம், மானம் இல்லாதவர்கள் அவர்கள்: ராமதாஸை விளாசும் ஸ்டாலின்!

0

ஊழல் கட்சியென தாம் தொடர்ச்சியாக விமர்சித்துவந்த அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதன் மூலம் தாம் வெட்கம், மனமில்லாதவர் என்பதனை பாமக நிறுவனர் ராமதாஸ் நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

நீட் நுழைவுத்தேர்வு, சேலம் எட்டு வழிச்சாலை, பல்வேறு துறைகளில் ஊழல் என பல விவகாரங்களில் தமிழக அரசை மிக கடுமையாக சாடிவந்தவர்கள் பாமக நிறுவனர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும். தமிழக அமைச்சர்கள் சிலரை தனிப்பட்ட முறையிலும் சாடிவந்தார் அன்புமணி. மேலும், அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை நேரடியாக ஆளுநரை சந்தித்தும் வழங்கியிருந்தார்கள்.

அதே சமயம், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் அணியில் அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இடம்பெறக்கூடுமென செய்திகள் வெளியாகி வந்த நிலையில் இன்று அதிமுக – பாமக கூட்டணியை உறுதி செய்துள்ளனர் இரு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள். பாஜக அணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜக, அதிமுக, பாமக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “ஊழல் கட்சி அதிமுக, இங்கு நடப்பது ஊழல் ஆட்சி என தொடர்ச்சியாக விமர்சித்துவந்தவர்கள், அதிமுக அரசின் ஊழல்கள் என பலவற்றை தொகுதி புத்தகங்களாக வெளியிட்டவர்கள் இன்று அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதன் மூலம் தாங்கள்(ராமதாஸ்) வெட்கம், மானம் இல்லாதவர்கள் என நிரூபித்துள்ளனர் என ராமதாஸை கடுமையாக சாடியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.