தென்னாபிரிக்கா போல இனப்படுகொலையை மறவுங்கள்! கிளிநொச்சியில் ரணில்!!

0

காலத்தின் தேவையை உணர்ந்து மன்னிப்புக்கோரி தமிழர்களுக்கு பிரதமர் அழைப்பு!

உண்மையை பேசி, மனம் வருந்தி மன்னிப்பு கோரி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் தேவை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலமையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தத்தினால் பல்வேறு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதன்போது இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன குறிப்பாக பல தமிழ் தலைவர் உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். அதேபோல் அப்பாவி மக்களும் இறந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் விடுதலை புலிகள் மீதும் படையினர் மீதும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. அவ்வாறு எந்த காலத்திலும் வழக்குகளை தாக்கல் செய்து கொண்டிருக்க முடியாது. இதற்கு முடிவை காண வேண்டும்.

தென்னாபிரிக்காவில் செய்ததை போன்று உண்மையை பேசி, மனம் வருந்தி, மன்னிப்பு கோரி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

முடிந்தவை நடந்து முடிந்தவையாக இருக்கட்டும். தற்போது உண்மையை பேசி, அதற்காக மனம் வருந்தி, மன்னிப்பு கோரி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே நாம் முயற்சிக்கின்றேன்.

இரு தரப்பிலும் இடம்பெற்றவைகள் தொடர்பில் உண்மையை கண்டறிய வேண்டும் எனவே மனம் வருந்தி, மன்னிப்பு கோரி நல்லிணக்கத்தின்பால் பயணிக்க வேண்டும். ஆகவே தற்போது நாட்டை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. குறிப்பாக வடக்கை அபிவிருத்தி செய்ய வேண்டும்.” என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.