முன்னாள் போராளிகளை தாக்கிய EPDP சந்திரகுமாரின் காடயர்குழு!

0

24.02.2019 அன்று கிளிநொச்சியில் நடைபெற்றகாணாமல் போனோர் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் செயற்பட்டுக்கொண்டிருந்த முன்னாள் போராளிகள் சிலர் மீதும் மாவீரரின் பெற்றொர் மீதும் தாக்குதல் நடாத்த முற்பட்டது EPDP சந்திரகுமாரின் காடயர்குழு.

ஆர்ப்பாடத்தில் கலந்துகொண்டிருந்த மேற்குறித்தவர்கள் சந்திரகுமாருக்கும் அவனது கூட்டத்திற்கும் என்ன சம்பந்தமுள்ளது இவன்தானே மகிந்தவுடன் சேர்ந்து எங்களை எங்களை விற்றுப்பிழைத்தவன் எனக்கூறிக்கொண்டிருந்த பொது சந்திரகுமாரின் சசி என்பவர் தன்னுடைய பரிவாரங்கள் சிலரை அழைத்துவந்து தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளார்.

இதன்போது அங்கிருந்தவர்கள் இதனைத் தடுத்து நிறுத்தி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இச்சம்பவம் இன்று நண்பகல் கனகாம்பிகைக்குளம் யுனிசேப் அமைந்துள்ள சிவன்கோவில் வீதியில் இடம்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.