அபினந்தனின் வீடியோ பதிவு குறித்து இந்திய அதிகாரிகள் மௌனம்!

0

எல்லை தாண்டி விமானத் தாக்குதல் நடாத்த வந்து பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபினந்தன் பாதுகாப்பான முறையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 9.30 மணியளவில் பாகிஸ்தான் அதிகாரிகள் தமிழக விமானப்படை விமானி அபினந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக இந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன.

சமாதானத்துக்காக தாம் இந்தியாவுடன் மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையே இதுவென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அபினந்தனின் விடுதலை குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.

அபினந்தனின் விடுதலை தாமதமாவதற்குரிய காரணங்களை இந்திய ஊடகங்கள் பலவும் தகவல் வெளியிட்டிருந்தன.

பாகிஸ்தானுக்கு வேண்டியவாறு அபினந்தனிடம் கருத்துக்களை பதிவு செய்வதற்கு பாகிஸ்தான் இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதன் காரணமாகவே அவரது விடுதலை தாமதமாகியது எனவும் அந்த ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

இருப்பினும், அபினந்தன் பாகிஸ்தானிலிருந்து வெளியிட்டிருந்த வீடியோ கருத்துக்கள் தொடர்பில் இந்திய அதிகாரிகள் எந்தவித உத்தியோகபுர்வ அறிவிப்புக்களையும் இதுவரை விடுக்க வில்லையெனவும் கூறப்படுகின்றது.

கடந்த 1971 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு நாடுகளும் விமானப் படையைப் பயன்படுத்தி தாக்குதல் நடாத்திய முதல் தடவையாக அண்மைய தாக்குதல் சம்பவம் நோக்கப்படுகின்றது.

இப்படியான ஒரு நிலையில், பிடிபட்ட இந்திய விமானியை பாகிஸ்தான் மனித நேயத்துடன் விடுதலை செய்ய முன்னெடுத்த தீர்மானம் பல உயர் மட்டங்களிலும் பேசு பொருளாக மாறியுள்ளமை சுட்டிக்காட்டப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.