ஆசிரியர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மைத்திரி ! என்ன கூறினார் தெரியுமா ?

0

மனித உரிமைகள் என்ற விடயம் முறையின்றி ஆசிரியர்களின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதனால் சிறந்தவொரு ஒழுக்கமுள்ள எதிர்கால தலைமுறையினை கட்டியெழுப்புதல் தற்போது சவால்மிக்கதாக காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எமது நாட்டில் அன்று முதல் பிள்ளைகளின் ஒழுக்கமானது பாடசாலைகளினால் பேணப்பட்டு வருகின்றது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்செயலாக இடம்பெறும் சில தவறுகளுக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் சமூகத்தினுள் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் சிறந்ததோர் ஒழுக்கமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கு ஆசிரியர்களால் ஆற்றப்படும் பணிகள் அளப்பரியனவாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறை, கொகாவல மத்திய மகா வித்தியாலத்தின் நூற்றாண்டு விழாவில் நேற்று (11) கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி  இதனைக் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.