இன்று கிழக்கில் பூரண கதவடைப்பு மற்றும் எழுச்சி போராட்டம்!

0

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் நீதி கோரியும் இன்று கிழக்கு மாகாணத்தில் பெரும் எழுச்சிப் போராட்டம் இடம்பெறுகிறது.

இதன் தொடர்ச்சியாக கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டம், மற்றும் மட்டக்களப்பில் எழுச்சிப் பேரணி இடம்பெறும்.

கடந்த மாதம் 25ம் திகதி வடக்கில் கதவடைப்பும், கிளிநொச்சியில் எழுச்சிப் பேரணியும் இடம்பெற்றது. கடந்த 16ம் திகதி பல்கலைகழக மாணவர்கள் யாழில் எழுச்சிப் பேரணி நடத்தினர். இதன் அடுத்த கட்டமாக இன்று கிழக்கில் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

கிழக்கு தழுவிய கதவடைப்பிற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். அத்துடன், காலை 10 மணிக்கு கல்லடி பாலத்தில் இருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகும்.

இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்குவாக யாழ் பல்கலைகழக சமூகம், கிழக்கு பல்கலைகழக மாணவர் சமூகம் என்பன அறிவித்துள்ளன.

இதேவேளை, இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி, இன்று கடைகளை பூட்டி ஒததுழைக்குமாறு யாழ் வர்ததகர் சங்கத்தை, தாம் கேட்டதாகவும், ஆனால் வர்த்தகர் சங்கம் அதை மறுத்ததாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.