இன்று லண்டனில் நடுகல் நாவல் வெளியீடு!

0

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலுக்கு, இன்று லண்டனில் வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது. விம்பம் அமைப்பு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வில் எழுத்தாளர்களான யமுனா ராஜேந்திரன், ரவி அருணாசலம், கோகுல ரூபன் ஆகியோர் சிறப்புரைகளை தொடர்ந்து வருகையாளர்களின் நாவல் குறித்த அனுபவப் பகிர்வும் இடம்பெறவுள்ளது. நிகழ்வை எழுத்தாளர் சயந்தன் நெறிப்படுத்துகின்றார்.

2019 – சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த நாவல், போருக்குள் பிறந்து வளரும் ஒரு சிறுவன் தனது கதையை பேசும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் வெளியாக ஒரு சில நாட்களிலேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் இந்த நாவல் கவனத்தை ஈர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் வெளியிடப்பட்ட நடுகல் நாவலுக்கு, கிளிநொச்சியிலும் பிரான்சிலும் அறிமுக விழாக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் விரைவில் கனடா, சுவிஸ் போன்ற நாடுகளிலும் நடுகல் வெளியீடுகள் இடம்பெறவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.