இப்படியான உன்னத மனிதர்கள் வாழ்ந்த நாடு ஈழம்!

0

அண்மையில், ஈழத்தில் இரண்டு மத முறுகல் நிலமைகள் தோற்றுவிக்கப்பட்டன. ஒன்று திருக்கோணேச்சரத்தில், சிவலிங்கம் சிலை உடைக்கப்பட்டது. மற்றையது திருக்கோதீச்சரத்தில், சிவராத்திரி வளைவு அழிக்கப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகள் மிகவும் முக்கியமானதொரு காலத்தில் செய்யப்பட்டிருக்கிறது. சிவராத்திரி என்பது ஈழத்து மக்களின் சமயப் பண்பாட்டில் மிகவும் முக்கியமான நிகழ்வு ஆகும். அந்த நிகழ்வு நெருங்கும்போதே இந்ச சதி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. 

\

Image may contain: 1 person, standing


ஈழத்தின் தலைநகர் திருகோணமலையின் அடையாளம், திருக்கோணேச்சரர் ஆலயம். இந்த ஆலயம் ஈழத்தின் பண்டைய ஈச்சரங்களில் ஒன்று. ஈழம் தமிழர்களின் நாடு என்பதற்கு ஈழத்தின் கிழக்கே உள்ள சாட்சியம் திருக்கோணேச்சரர் ஆலயம். இந்த ஆலயம் இராவணனின் ஆலயம். அவனால் ஆராதிக்கப்பட்ட கோயில். இராணவனன் உள்ளிட்ட ஈழ மன்னர்களின் திருக்கோயில் பணியாக நிமிர்ந்து நிற்கிறது கோணேச்சரம். 

போத்துக்கேசர், ஒல்லாந்தர், பிரித்தானியர்களின் அழிவுகளிலிருந்து மீண்டெழுந்த கோணேச்சரம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், சிங்களவர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கிறது. கோணேச்சரர் ஆலய எல்லைகளுக்குள் சிங்களவர்கள் கடைகளை போட்டுக் கொண்டு அங்கே புத்தர் சிலையையும் வைத்திருக்கின்றனர். சுற்றி சுற்றி இராணுவ முகாங்களும் காவல்நிலையங்களும்தான் உள்ளன. 

இப்படி ஒரு சூழலில்தான் சிராத்திரி நிகழ்வுக்கு ஆலயய் தயாராகிக் கொண்டிருந்தபோது, சிவலிங்கம் சிலை உடைக்கப்பட்டது. சிவலிங்கம் சிலையையை உடைத்தவர்கள், சிங்களவர்கள் என்பது பின்னர் தெரிய வந்தது. ஈழத்தில் எத்தனையோ ஆலயங்கள்மீது குண்டு வீசி, மக்களுடன் கடவுளர்களையும் கொலை செய்தபோதும் இன்னமும் அவர்களுக்கு வெறி அடங்கிவில்லை. போருக்குப் பிறகும் சைவ ஆலயங்களை அழிப்பது யார் என்றும் இதன்மூலம் புலப்படுகின்றது. 

Image may contain: one or more people and people standing


இது இப்படி இருக்க, மன்னார் மாதோட்டம், திருக்கேதீச்சரத்தில், சிவராத்திரிக்காக வைக்கப்பட்ட வளைவை கிறிஸ்தவர்கள் என தம்மை சொல்லிக் கொண்ட ஒரு பாதிரியும் சிலரும் அழித்துள்ளனர். சைவ மக்களை மிகவும் காயப்படுத்தும் செயற்பாடாக அதனை அவர்கள் முன்னெடுத்தபோதும், அது ஈழக் கிறீஸ்தவர்களை வெட்கி தலைகுனிய வைக்கும் செயலாகும். 

Image may contain: 2 people, crowd

ஈழம் தமிழர்களின் நாடு என்பதற்கு திருக்கேதீச்சரம் வடக்கே உள்ள சாட்சி. கோணேச்சரமும் கேதீச்சரமும் பல்ல்வர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்களினால் பாடல் பெற்ற திருத்தலங்கள். இன்றைக்கு முஸ்லீம் மற்றும் பௌத்த ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தை மேலும் ஒரு நெருக்கடிக்கும் துன்பத்திற்குள் தள்ளும்வேலைதான் தற்போது அங்கே நடந்துள்ளது. 
ஈழத்தில் சில உன்னதமான பாதிரிகள் வாழ்ந்துள்ளார்கள். அவர்களை சைவர்களைக் காட்டிலும் ஈழ மக்களுக்காக ஈழ மண்ணுக்காக ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்ப்பணித்து சேவையாற்றியுள்ளனர். அவர்கள் தம்மை தமிழனாகவே அடையாளம் கொண்டவர்கள். 

Image may contain: one or more people and people standing


வணக்கத்திற்குரிய ஜிம்புரவுன் அடிகளால் அல்லைப் பிட்டியில் காணாமல் ஆக்கப்பட்டார். அருட்தந்தை கருணாரட்டினம் அடிகளார், தமிழர்களுக்கு குரல் கொடுத்தமைக்காக, கிளைமோர் வைத்து சிங்கள அரசால் சொல்லப்ட்டார். முள்ளிவாய்க்காலுக்குப் பின், ஓமந்தையில், போராளிகளை அழைத்துச் சென்ற அருட்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். 


அனைத்து மக்களும் இந்த உண்மைகளையும் வரலாற்றையும் கொண்டு எதிர்வரும் காலத்தை அமைப்போம். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர், தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதையில், அனைத்து பேதங்களும் களைந்து ஓரணியில் நின்றதைப் போலவே தொடர்ந்து பயணித்து, தமிழீழ இலட்சியத்தை வென்றெடுப்போம். 

ஆசிரியர்,ஈழம்நியூஸ்.
06.03.2019

Leave A Reply

Your email address will not be published.