இயந்திர வாள்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு!

0

நாட்டின் பாவனையில் உள்ள சகல இயந்திர வாள்களையும் (Chainsaw Machines) பதிவுசெய்வதற்கான கால எல்லை இம்மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக அனைத்து அரசாங்க சார்பற்ற தனியார் துறை நிறுவனங்களும் அவற்றை வைத்திடும் போது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து அதற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எந்த காரணத்துக்காகவும் இயந்திர வாள் பாவனையின் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் உத்தரவிற்கு அமைவாக பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்துக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.