இலங்கையில் 26 ஆயிரம் கோடி முதலீடு செய்த அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்?

0

அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் குடும்பத்தினர், இலங்கையில் 26ஆயிரம் கோடி ரூபாயில் தொழில் தொடங்க முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையல் தொடங்க, சிங்கப்பூரில் உள்ள சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. சுமார் 26ஆயிரம் கோடி ரூபாயில் அமையும் இந்த நிறுவனத்தை ஓமன் அரசு திட்டமிட்டுள்ளதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் ஓமன் அரசு இதை மறுத்துள்ள நிலையில், சிங்கப்பூர் நிறுவனம்தான் இந்த ஒப்பந்தம் போட்டுள்ளனர் என்றும் ஓமன் அரசு தெரிவித்துள்ளது.

இந்த சிங்கப்பூர் நிறுவனத்தின் இயக்குநர்களாக  சுந்தீப் ஜெகத்ரட்சகன், ஸ்ரீநிஷா ஜெகத்ரட்சகன் மற்றும் அனுசியா ஜெகத்ரட்சகன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் ஜெகத்ரட்சகனின் மகன், மகள் மற்றும் மனைவி ஆவார்கள்.

இலங்கையில் இவ்வளவு பெரிய நேரடி முதலீடு செய்யும் நிறுவனம் இதுதான் என்பதாலும், அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர் இவ்வளவு பெரிய முதலீடு செய்யும் தகவலாலும், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் அளித்த ஜெகத்ரட்சகன், இப்போதுதான் பேச்சு வார்த்தை நடக்கிறது என்றும், இன்னும் தொழில் தொடங்க வில்லை என்றும் வெளிப்ப்டையாக கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.