இலங்கை பெண்மணி அமெரிக்காவின் தலைசிறந்த விருதுக்கு தெரிவு!

0

உலகலாவிய ரீதியில் சிறந்த 10 பெண்களிற்கு ஆண்டு தோறும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இந்த விருதை வழங்குகிறது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவில் வழங்கப்படும் உலகலாவிய ரீதியிலான விருதிற்கு இலங்கையை சேர்ந்த பெண்மணி ஒருவர் தெரிவாகியுள்ளார்.

பெண்கள், சிறுவர்களின் உரிமைகளிற்காக தொடர்ந்து செயற்பட்டு வரும் இலங்கையின் சட்டத்தரணி மெர்லின் லிவேராவும் இந்த ஆண்டின் விருதுக்குரியவராக அமெரிக்கா அறிவித்துள்ளது.

2007 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

சந்தியா எக்னொலிகொட, ஜன்சிலா மஜீத் ஆகிய இலங்கை பெண்கள் ஏற்கனவே இந்த விருதை பெற்றுள்ளனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவராகவும் மெர்லின் லிவேரா கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.