ஈழத்தில் புத்தனின் படையெடுப்பிற்கு எதிராய் தோன்றும் சுயம்புலிங்கங்கள்! அதியம்! அவசியம்!!

0

இன்று காலையில் இருந்து இப்படம் பேஸ்புக்கில் பல்வேறு தரப்பினரால் பல்வேறு தலைப்புக்கள் ஊடாக பரப்பப்பட்டு வருகிறது அனேகமாய் அவை இச்சம்பவத்தை கேலிசெய்யும் வகையில்தான் அமைந்திருக்கின்றன.

சிவலிங்கம் சுயமாய் தோன்றியதா இல்லையா என்பதை விட அங்கு அது தோன்றியதில் அல்லது வைக்கப்பட்டதில் என்ன தவறு இருக்கிறது? இதையேன் ஈழத்திருநாட்டின் புதல்வர்கள் விமர்சிக்கின்றனர் என்று எனக்குத் தெரியவில்லை.

ஈழத்தை சிவ பூமி என்கின்றனர் சிவபூமியில் சிவலிங்கம் தோன்றினால் விமர்சிக்கின்றனர். காக்கையின் எச்சத்தில் முளைத்த அரசமரங்களின் கீழ் புத்தரை ஏன் வைக்கிறீர்கள் என்று சிங்களவர்கள் கேலிபேசியிருந்தால் இன்று பெளத்தத்தின் பெயரால் அவர்களுக்கு ஓர் நாடு கிடைத்திருக்குமா?

பெளத்த ஆதிக்கம் பெளத்த ஆதிக்கம் என்று கூச்சலிடுகின்றனர் மூலைக்கு மூலை புத்தர் சிலை முளைக்கிறதே ஐயகோ இதுவென்ன சிவபூமிக்கு வந்த சோதனையெங்கின்றனர் அந்த ஆதிக்கத்தை எதிர்க்க இதுவரை என்ன செய்திருக்கின்றனர்? சிவபூமியென்று வாயால் சொல்லிக்கொண்டிருந்தால் போதுமா அதன் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாமா?

இலங்கை ஓர் பெளத்த சிங்கள நாடு என்பதற்கு அப்பால்சென்று உலகின் பெளத்த மத்திய நிலையமாக இலங்கைத்தீவை சிங்களவர்கள் மாற்றி அமைத்திருக்கின்றனர். இனி இலங்கையின் பெயரில் பெளத்த சிங்கள நாடு என்ற அடைமொழி தேவையற்றது இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர் திரும்பும் இடமெல்லாம் தென்படும் புத்தர் சிலைகளை பார்த்து இது பெளத்த நாடு என்ற முடிவுக்கு அவர்களே வந்துவிடுவர் இந்த நிலை சிவபூமிக்கு உண்டா? ஈழத்தை சிவ பூமி என்று சொன்னால் சிரித்துவிடுவார்கள் அங்கு சிவனை தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்.

ஒரு இனம் தன்னை இப்பூமியில் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமெனில் அதன் தனித்துவங்களையும் அடையாளங்களையும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும். தனித்துவங்களும் அடையாளங்களும் அற்ற இனக்குழுமங்கள்கூட தமக்கென ஒன்றை உருவாக்கியோ இல்லை இன்னொன்றில் இருந்து உருவியெடுத்தோ உரிமையாக்கிக்கொள்கின்றனர் பின் அதனூடாக தம்மை அடையாளப்படுத்தி நிலைப்படுத்திக்கொள்கின்றனர்.

உலகின் மூத்த குடி தமிழன், மூத்த மொழி தமிழ் மூத்த மதம் சைவம் பேச்சளவில் எல்லாம் உண்டு நிஜத்தில் ஒரு மயிரும் இல்லை. இதெல்லாம் எதனால் உண்டானது அந்நிய மொழிக்கும் மதத்திற்கும் அடிமையாகி எச்சையை நக்கி தமிழன் தன் வயிற்றை வளர்த்துக்கொண்டதால் வந்தது.

இன்றும் அப்படியான எச்சையை நக்கி வயிறு வளர்க்கும் எச்சைகள்தான் இந்த சம்பவத்தையும் விமர்சிக்கின்றனர்.

இலங்கையின் அடையாளமாய் மூலைக்கு மூலை புத்தர் இருக்கும்போது ஈழத்தின் அடையாளமாய் சந்திக்குச் சந்தி சிவன் இருந்துவிட்டுப்போகட்டுமேன் அதனால் உங்களுக்கென்ன கவலை?

ஈழத்தை அடையாளமாற்றம் செய்ய சிங்களவர்கள் புத்தரை கையிலெடுத்தார்கள் அதை எதிர்க்க இன்று ஈழத்தவர்கள் சிவனை கையிலெடுத்திருக்கிறார்கள் இதுதான் சரியான வழி…

தமிழனுக்கு சோறில்லை வீடில்லை சிவனா முக்கியம் என்று வகுப்பெடுப்போர் கிராமங்களில் இன்னும் சிங்களவர்கள் பிலாக்காயும் சோறும் சாப்பிட்டுக்கொண்டிருக்க தங்கத்தில் தலதா மாளிகைக்கு கூரை முக்கியமா என்றதைக் கேட்டு அதற்கான பதிலைப் பெறுங்கள்

நன்றி.. வணக்கம் பணிகின்றேன்!
சுப்ரமணிய பிரபா

Leave A Reply

Your email address will not be published.