ஈஷா யோகா மையத்தில் விடிய விடிய சிவராத்திரிதான்: காஜல் அகர்வால்!

0

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இந்த விழாவில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டிற்காக வீரமரணமடைந்த வீரர்களின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன. மக்களை அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்லக் கூடிய ஆற்றல் படைத்தது யோகா என குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், மத்திய, மாநில அமைச்சர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். திரையுலக பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். ராணா டகுபதி, காஜல் அகர்வால், தமன்னா, அதிதி ராவ் என பலர் கலந்து கொண்டனர். அவர்கள் அந்த புகைபடங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டனர். இதை விட சிறப்பாக சிவராத்திரியை கொண்டாட முடியாது என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.