உங்க குழந்தைங்க காவலாளி ஆகணும்னா மோடிக்கு ஒட்டு போடுங்க! நல்லா படிச்சு டாக்டர் ஆகணும்னா என் கட்சிக்கு ஒட்டு போடுங்க- கெஜ்ரிவால்….

0

நானும் காவலாளிதான் என்ற முழக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி தனது மக்களவை தேர்தல் பிரசாரத்தை அண்மையில் தொடங்கினார். தற்போது டிவிட்டாில் நானும் காவலாளிதான் என்பது டிரெண்டிங்காக உள்ளது. 

நானும் காவலாளிதான் என்ற மோடியின் வார்த்தையை தனக்கு சாதகமாக மாற்றி விட்டார்  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். கெஜ்ரிவால் டிவிட்டாில்,  நாட்டில் உள்ள அனைவரையும் காவலாளியாக மாற்ற நினைக்கிறார் மோடிஜி. உங்கள் குழந்தைங்க காவலாளியாக மாற வேண்டும் என்றால் மோடிஜிக்கு ஓட்டு போடுங்க. ஆனால் குழந்தைகளை டாக்டர், என்ஜினீயர் மற்றும் வக்கீலாக  உருவாக்க அவர்களுக்கு நல்ல கல்வியை கொடுக்க நினைத்தால் நேர்மையான மற்றும் படித்த ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுங்க என்று பதிவு செய்து இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.