உள்ளாடையில் தங்கக் கட்டிகளை மறைத்து கடத்திய பலே கில்லாடி பெண்

0

சென்னைக்கு வந்த பெண்ணின் உள்ளாடையில் 46 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் இருந்து வந்த பெண்ணிடமே குறித்த தங்கக்கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாங்காக் விமானம் மூலம் தாய்லாந்தை சேர்ந்த பெண் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.

அந்த பெண்ணின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அவர் அணிந்திருந்த உள்ளாடையில் தங்க கட்டிகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

46 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 385 கிராம் எடையிலான 2 தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து உள்ளாடையில் தங்கக்கட்டிகளை கடத்திய அப்பெண்ணையும் அவரிடம் இருந்து தங்கக் கட்டிகளை பெறுவதற்காக விமான நிலையம் வந்த மற்றொரு நபரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.