ஏப்ரலில் வெளியாகின்றது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’!

0

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் – மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் ட்ரைலர் தயாராகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை, படத்தின் தயாரிப்பாளர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நீண்ட நாட்களாக வெளிவராத நிலையில், 2016ஆம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகி, கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்தது. சமீபத்தில் தணிக்கை குழு திரைப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.

இதையடுத்து படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் தயாரானபோது, படத்திற்கு மேலும் சில சிக்கல்கள் ஏற்பட்டன.

இவ்வாறு நீண்ட இழுபறிக்குப் பின்னர் தற்போது இத்திரைப்படம் வருவதை முன்னிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இத்திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.