ஐநா மனித உரிமைகள் தொடரில் இலங்கை சார்பாக களமிறக்கப்படுகிறார் வடக்கு ஆளுநர்!

0

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை ஜனாதிபதி சார்பான குழுவில் வடக்கு ஆளுனர் சுரேன் இராகவனும் இடம் பெற்றுள்ளார் என்னும் விடயம் வெளியாகியுள்ளது.

சரத் அமுனுகம, மஹிந்த சமரவீர, சுரேன் இராகவன் ஆகியோரைக் கொண்ட குழுவே ஜெனீவா பயணமாகிறது.

இந்த குழு, ஜனாதிபதியின் சார்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும்.

இதற்கான அறிவிப்பை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளார்.

இதேவேளை, ரணில் அரசு சார்பிலும் குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிகிறது.

இலங்கையிலிருந்து இரண்டு குழுக்கள் செல்வதால், இலங்கை சார்பில் பேசவல்ல குழு எதுவென்பதில் ஜெனீவாவிலுள்ள இலங்கை தூதரகம் குழப்பமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.