ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு சின்னம்! அதிர்ச்சியில் அமமுக!

0

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு சின்னம்! அதிர்ச்சியில் அமமுக!

ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்படுமோ என்ற அச்சம், அமமுக கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சியின் பெயரைக் கூட தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் பதிவு செய்யவில்லை. அதிமுகவின் சின்னம் குறித்த வழக்கு, இன்னும் தொடர்ந்து நடந்து வருவதாலும், அதிமுகவின் ஒரு பிரிவு என்ற ரீதியில் டிடிவி தினகரன் இயங்கி வருவதாலும், தனிக் கட்சியாக அமமுகவை தேர்தல் ஆணையத்தில் இன்னும்  தினகரன் தரப்பினர் பதிவு செய்யவில்லை.

இந்த வழக்கில் 25ஆம் தேதி தீர்ப்பு வரும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி தினமாக 26ஆம் தேதி இருக்கிறது. 

இந் நிலையில், பதிவு பெற்ற கட்சி என்ற அடிப்படையில் 40 தொகுதிகளுக்கும் ஒரே சின்னம் கேட்டால் வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் முன்வரும். ஆனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பதிவு செய்யப்படாத நிலையில், ஒரே சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், அமமுக சார்பில் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்படும் என்றே தெரிகிறது. இது தொடர்பாக பேட்டி அளித்த தினகரனும், ஒவ்வொரு தொகுதியில் ஒவ்வொரு சின்னத்தில் நின்றாலும், நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று  கூறிவருகிறார். 

ஒரே சின்னம் கிடைக்குமா, ஒவ்வொரு தொகுதியில் ஒவ்வொரு சின்னம் கிடைக்குமா என்ற அச்சம், அமமுக தரப்புக்கு ஏற்பட்டுள்ளது என்பது உண்மையே.

Leave A Reply

Your email address will not be published.