ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் கல்லால் அடித்துக் கொல்லப்படுவார்கள் ! அமுலுக்கு வரும் புதிய சட்டம்

0

புரூனேவில் புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய சட்டங்களின்படி ஓரினச்சேர்க்கையாளர்களும் பாலியல் குற்றம் புரிவோரும் கல்லால் அடித்தோ, சாட்டையால் அடித்தோ கொல்லப்படுவார்கள் என மனித உரிமைகள் அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.

ஏற்கனவே இருக்கும் இஸ்லாமிய மதச்சட்டங்களின்படி ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த மாத தொடக்கத்திலிருந்து அறிமுகமாகும் புதிய சட்டங்களின்படி, ஓரினச்சேர்க்கையாளர்களும் பாலியல் குற்றம் புரிவோரும் கல்லால் அடித்தோ, சாட்டையால் அடித்தோ கொல்லப்படலாம்.

மேலும் முதல்முறை திருடுபவர்களின் வலது கை வெட்டப்படுவதோடு, மீண்டும் அவர்கள் அதே குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களது இடது கால் பாதம் வெட்டப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்த புதிய சட்டங்கள் சிறுவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரபல மனித உரிமைகள் அமைப்பான Amnesty International, இந்த சட்டங்கள் குரூரமானவை என கடுமையாக விமர்சித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.