கண்ணை மறைத்த முகப்புத்தகக் காதல்: இலங்கைக்கு வந்து, அனைத்தையும் இழந்த புலம்பெயர் தமிழர்…!

0

முகப்புத்தகத்தினூடு அறிமுகமாகி,  காதலித்த பெண்னை நம்பி யாழ்ப்பாணம் சேர்ந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழரொருவர் 55 லட்ச ரூபாய் பணம் நகை என்வற்றை யாழில் பறிகொடுத்துள்ளார்.

குறித்த பெண்ணை நம்பி யாழ்ப்பாணம் வந்தவர், பணத்தை பறிகொடுத்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் வாழ்வதாக கூறி முகப்புத்தகம் ஊடாக ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவரை குறித்த பெண் காதலிப்பதாக கூறி முகநூலில் காதலித்துள்ளார்.

அதனை உண்மையென நம்பி குறித்த நபர், கோப்பாய் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த ஜனவரி மாதம் வந்துள்ளார். அவருடன் அவருடைய முகப்புத்தக காதலியும் வந்து ஒரே வீட்டில் தங்கியிருந்துள்ளனர். 

இவ்வாறு 14 நாட்கள் கடந்த பின்னர் திடீரென ஒருநாள் முகப்புத்தக காதலி வீட்டிலிருந்த பணம், நகைகள், பொருட்கள் என சுமார் 55 லட்சம் ரூபாயினை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து,  பாதிக்கப்பட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளதையடுத்து, மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.