கனடாவில் புகலிடம் கோரிய இலங்கை குடும்பத்தினருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

0

கனடாவில் புகலிடம் கோரிய இலங்கை குடும்பத்தின் விண்ணப்பம் குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது. எனினும் இலங்கை குடும்பத்தினருடன் இணைந்து புகலிடம் கோரிய மற்றுமொரு குடும்பத்திற்கு கனடாவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க புலனாய்வு அமைப்பின் முன்னாள் தகவல் வழங்குனர் எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ஹொங்கொங்கில் அடைக்கலம் வழங்கியமையினால் இலங்கை குடும்பத்தினர் பாதிகப்பட்டனர்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட மூன்று இலங்கையர்களின் கோரிக்கையை கனேடிய அரசாங்கம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஹொங்கொங்கில் தங்கியிருக்கும் குறித்த இலங்கை குடும்பம், அந்நாட்டிலும் புகலிடம் கோரிய போதும் அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்தது.

இருந்த போதும், இதுவரையில் அவர்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்று கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர்களுடன் ஹொங்கொங்கில் தங்கி இருந்த பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் அவரது மகளுக்கும் கனடாவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்தப் பெண்ணும், எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கியிருந்தார். தமக்கு உதவிய குறித்த நான்கு பேருக்கும் கனடா அடைக்கலம் வழங்க வேண்டும் என்று எட்வர்ட் ஸ்னோவ்டன் சமுக வலைத்தளங்கள் ஊடாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.