கிராமியப் பெண்களை வலுப்படுத்துவதற்கான புதிய திட்டம் அமுல்!

0

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கிராமியப் பெண்களை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் அரச சேவையிலும், தனியார் துறையிலும் பெண்களின் பங்களிப்பு உயர்ந்த மட்டத்தில் காணப்படுகிறது. ஆண்கள் செய்யும் வேலைக்கு சமமான பணிகளை கிராமியப் பெண்களும் மேற்கொள்கின்றனர். சமூகத்தில் பின்னடைவு கண்டிருந்த பெண்களை தற்போதைய அரசாங்கம் முன்னிலைப்படுத்துவதற்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.