கிரிக்கெட் மட்டையால் மாணவனை அடித்துக் கொலை ! உடலை பாடசாலை வளாகத்தில் புதைத்த கொடுமை !

0

7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சக மாணவர்களால் அடித்துக்கொலை செய்து உடலை பாடசாலை வளாகத்திலேயே புதைத்த சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் அருகே உள்ள பாடசாலை ஒன்றில் அதே பகுதியை சேர்ந்த மாணவன் 7 ஆம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் குறித்த மாணவன் சக மாணவர்களுடன் உல்லாசப்பயணம் சென்றிருந்த போது அந்த மாணவன் பிஸ்கெட்டை திருடியதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து தண்டனையாக அனைத்து மாணவர்களும் பாடசாலையைவிட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த மூத்த மாணவர்கள், சம்பவத்தன்று குறித்த மாணவனை பாடசாலையில் வைத்து கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் சுருண்டு விழுந்த மாணவனை பாடசாலை நிர்வாகம் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து பெற்றோருக்கு தெரிவிக்காமலேயே அந்த மாணவனின் உடலை பாடசாலை வளாகத்திலேயே புதைத்து விட்டனர்.

இதில் பாடசாலை அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்த விவகாரம் உத்தரகாண்ட் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கவனத்துக்கு சென்றது.

அதைத் தொடர்ந்து பாடசாலை மேலாளர், வார்டன், விளையாட்டு ஆசிரியர், 2 மாணவர்கள் என 5 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.