கிளிநொச்சயில் மனைவியுடன் கள்ளத் தொடர்பு!! வெளிநாட்டு கணவனால் கள்ளக்காதலன் கொலை!! (Photos)

0

வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கிளிநொச்சியில் வீடொன்றில் வைத்து வெட்டிக் கொலை  செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி உதயநகரில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வவுனியாவைச் சேர்ந்த பிறேமரமணன் (வயது-32) என்ற நபரே கொலை செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் வந்த பின்னரே முழுமையான தகவல்களைப் பெறமுடியும் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தலைவர் ஒருவர், தனது மனவியுடன் தொடர்பை வைத்திருந்தார் என்ற குறிப்பிட்டு  அந்த நபரை வெட்டியுள்ளார்.

வெட்டுக்காயத்துக்குள்ளான நபர் மு.ப. 9 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என்று மு.ப. 10 மணிக்கு மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

அவரை வெட்டிய நபர் கிளிநொச்சிப் பொலிஸில் சரண்டைவார் என உறவினர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் CO-OP Insurance Company Limited காப்புறுதி முகாமையாளர் எனவும்  பல பெண்களுடன் தொடர்புவைத்திருப்பர் எனவும் தெரியவருகின்றது.  

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.