க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவி யார் தெரியுமா ? ! குவியும் பாராட்டுக்கள்! படம் உள்ளே

0

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகின.முதல் 10 இடங்களில் தமிழ் மொழிமூலம் தோற்றிய எந்தவித மாணவர்களும் இடம்பெறவில்லை.

இந்தநிலையில், கொழும்பு விசாகா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிலன்க திசிவாரி வருசவிதான அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.

இரண்டாம் இடத்தை கொழும்பு விசாக மகளீர் கல்லூரியை சேர்ந்த கரசின்க ஆராச்சிகே சவிதி ஹன்சதியும், கம்பஹா ரத்னவலி மகளீர் கல்லூரியின் சஞ்சனி திலேகா குமாரியும், மாத்தறை சுஜாதா ராஹூல வித்தியாலத்தின் களுஆராச்சிகே கன்கனம்கே மினிதி ரெபேகா ஆகிய மூன்று பேர் பெற்றுக் கொண்டனர்.

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்காக ஆறு லட்சத்து 56 ஆயிரத்து 984 பேர் விண்ணப்பித்திருந்தனர்.அதில், ஐந்து லட்சத்து 18 ஆயிரத்து 184 பேர் பரீட்சைக்காக தோற்றியிருந்தனர்.

இதில் 71.66 சதவீதமானோர் கல்விப் பொதுத்தராதர உயர் தரத்தை தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் 9 ஆயிரத்து 413 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளை பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.