க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இன்று இரவு வெளியாகிறது!

0

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (28) நள்ளிரவு இணையத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இந்தப் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk எனவும் முகவரியில் வழமை பேன்று பார்வையிடலாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெற்ற இப்பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் மொத்தம் 656641 பரீட்சார்த்திகள் தோற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.