சிங்கள அபிநந்தன்! இம்ரான் கானை மிஞ்சிய பிரபாகரன்! படம் இணைப்பு!!

0

“வடபோர்முனை” என அழைக்கப்பட்ட 
முகமாலைப்பகுதிக் களமுனையில் ஶ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இவர் காயடைந்தார். 

இவரின் பெயர் புஷ்பகுமார ஆகும். பதவி நிலை நினைவில் இல்லை. 

2009ஆம் ஆண்டு தைத் திங்கள் நடைபெற்ற மிக உக்கிரமான சமரில் 
தமிழர்சேனையால் செங்களத்திடை மீட்கப்பட்டார். 

களமுனையில் கடமையில் இருந்த தமிழர் சேனையின் இராணுவ வைத்தியர்களால் துரித சிகிச்சை வழங்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இடம்பெயர்ந்து தருமபுரத்தில் இயங்கிய கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையிலும் அன்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

மிக நல்ல முறையில் பராமரிப்பும் வழங்கப்பட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக மேலதிக சிகிச்சைக்காக 
பத்திரமாக அனுப்பட்டார்.

யுத்தக் கைதிகளை எவ்வாறு 
பராமரிக்கப்பட வேண்டுமென அண்டைய இரு நாடுகள் விவாதம் செய்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் என் நினைவில் மலர்ந்தவை.

“எத்தனை பெரிய மனம் உனக்கு
தமிழா!

எத்தனை பெரிய மனம் உனக்கு
எல்லோரும் மனிதரே
என்பது உன் கணக்கு” 

-கவிஞர் காசியானந்தன்-

Tharshan Tharum அவர்களின் அருமையான காலத்திற்கு ஏற்ற பதிவு. எனக்கு ஒன்றும் தெரியாது.
தெரிந்தவர்கள் இப்படியான பதிவுகளை(ஆதாரத்துடன்) போடவேண்டும்.
நல்வாழ்த்துகள்.

Leave A Reply

Your email address will not be published.