சீட்டு காசு கொடுக்க 2000 ரூபா இல்லாததால் 19 வயது இளம் தாய் தற்கொலை ! படங்கள் உள்ளே

0

மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேசத்தில் சீட்டு காசு கொடுக்க 2000/= ரூபா இல்லாததால் 19 வயது இளம் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது .

ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மாவடிவேம்பில் பிரதேசத்தில் வசித்து வரும் ,மேசன் தொழில் செய்துவரும் முரளீதரன் என்ற இளைஞன், தனது 17 ஆவது வயதிலும், ஜானு என்ற யுவதி தனது ஆவது 15 வயதிலும் திருமணம் முடித்து தற்போது மூன்று வயதுடைய பெண் குழந்தையொன்றுக்கு பெற்றோராகிய நிலையில்,

குடும்பச்சுமைகளை எவ்வாறு சமாளிப்பதென்றே தெரியாத பருவத்தில், சுமைகளை தலையில் தூக்கி வைத்ததால் ஏற்பட்ட வினையே இந்த தற்கொலை.

கணவனின் வருமானத்துக்கேற்ப செலவினை வகுக்க தெரியாத பருவத்தில்,
ஆடைக் கொள்வனவு முதல் இன்னோரன்ன தேவைகளை தவணை அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட மனைவி ஜானு,
மாதாந்தம் 2000 /=, 200/=என சீட்டுக்காசி கட்டுவதற்கும் சேர்ந்ததால், நாளடைவில் இவற்றுக்கு பணம் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட தற்கொலைக்கு சென்றிருக்கிறார் என கணவர் முரளிதரன் தெரிவித்தார்.

, மணிவாசகர் வீதி, மாவடிவேம்பு -02,ஐ சேர்ந்த, சிவானந்தம் ஜானு (19) என்ற இளம் தாயே இவ்வாறு.
நேற்று (10 /03) காலை 10.00 மணியளவில் தனது வீட்டின் படுக்கையறை வளையில் துணியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மரணித்தவராவார்.

மட்டக்களப்பில் யுத்தகாலத்தில் கிராமபுறங்களில் ஆயுதக்குழுக்கள் ஆட்சேர்ப்பு பீதியில் சிறுவயதில் திருமணம் முடித்தார்கள் அப்பொழுது ஏற்றுக்கொள்ள கூடியதாகயிருந்தது.இப்பொழுதும் சிறுவயது திருமணங்கள் மலிந்து காணப்படுவது குறைந்த பாடில்லை.அதிகமாக சிறுவயது திருமணங்கள் செங்கலடி பிரதேசத்திலுள்ள மயிலவெட்டுவான் ,பாலர்சேனை,ஆயித்தியமலை ,ஈரலகுளம்,வாகனேரி,உறுகாமம் ,பகுதிகளிலே உள்ளது,இப்பகுதி மருத்துவ மாது கர்ப்பணி கிளினிக் நிலையங்களில் உள்ள தரவுகளில் காணலாம்,
எவளவுக்கு சிறுவயது திருமணம் நடைபெறுகின்றதோ அவளவுக்கு விவாகரத்தும் தற்கொலையும் நடைபெறுகின்றது.உரிய வயதில் குடும்ப சுமையை சமாளிக்கு பக்குவம் ,கணவன் மனைவியிடையான புரிந்துணர்வு அற்று காணப்படுகின்றது.

இதனால்தான் இன்று மற்றுமொரு தற்கொலை சம்பவம் தெளிவுபடுத்துகின்றது.

Leave A Reply

Your email address will not be published.