தனது அறிவால் வெளிநாடொன்றில் இலங்கையருக்கு கிடைத்த பல கோடிகள்; வியப்பில் மக்கள்!

0

ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையர் ஒருவருக்கு பெரும் அதிர்ஷ்டம் அடித்துள்ளதுள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும்.,

இத்தாலியில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான “உங்களில் யார் அடுத்த மில்லியனர்?” என்ற போட்டியில் அவர் 150000 யூரோ பணப்பரிசை வென்றுள்ளார்.

அவர் மொத்தமாக 13 கேள்விகளுக்கு சரியான பதிலளித்ததன் மூலம் இந்த பணத்தை தொகையை வென்றுள்ளார் என இத்தாலி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட மசுப் லிதிப், இத்தாலியில் வைத்தியராக பணியாற்றி வருகின்றார். 1979ஆம் ஆண்டு அவரது குடும்பத்தினர் இத்தாலிக்கு சென்றுள்ளனர்.

29 வயதான மசுப் இந்த போட்டியில் கலந்து கொண்டு 13 கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்துள்ளார். அதற்கமைய அவர் 150000 யூரோ பணப்பரிசுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

அந்த பணத்தொகை இலங்கை பெறுமதியில் 3 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.