தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளுக்கு மீள் குடியேற நடவடிக்கைகள்!

0

தமிழகத்திலிருந்து 54 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்.

நாளையும் எதிர்வரும் 28ஆம் திகதியும் இவர்கள் நாடு திரும்பவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

விசேட விமான சேவைகளின் ஊடாக குறித்த இரண்டு தினங்களிலும், 24 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் நாடு திரும்பவுள்ளனர்.

மேலும் இவர்கள் இவர்களது சொந்த இடமான யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலேயெ மீள குடியமர்த்ப்படுவார்கள் என மைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.