தற்போது வெளிவந்துள்ள உண்மை; அடித்து கொல்லப்பட்ட பாகிஸ்தான் விமானி!

0

இந்திய விமானி எனத் தவறாக நினைத்து சொந்த மக்களால் பாகிஸ்தானிய விமானி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தியர் எனத் தவறாகக் கருதி சொந்த மக்களால் பாகிஸ்தானின் எப் 16 ரக ஜெட் விமானத்தின் விமானியே இவ்வாறு அடித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த சட்டத்தரணியான காலித் உமர் என்பவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் எப் 16 ரக ஜெட் விமானம் இந்திய இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டபொழுது அது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்துள்ளது.

அதன்போது குறித்த விமானத்தின் விமானி ஷாஜாஸ் உத்தீன் படுகாயமடைந்திருந்த நிலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், அவரை இந்தியர் என நினைத்து அங்கு கூடியிருந்த கும்பல் இரக்கமின்றி அடித்து தாக்கியுள்ளது.

இதன்பின் அவர் தமது நாட்டைச் சேர்ந்தவர் என அறிந்ததும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் எந்த பலனுமின்றி அவர் உயிரிழந்துள்ளார் என சட்டத்தரணி காலித் உமர் மேலும் தெரிவித்து உள்ளார்.

இதேவேளை குறித்த விமானம் சுட்டுவிழுத்தப்பட்டதையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 இந்திய விமானிகள் இராணுவத்திடம் சிக்கி உள்ளனர் என கூறியிருந்ததுடன், பின்னர் ஒரு விமானி எனத் தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.