திருக்கேதீச்சர ஆலய சிவராத்திரி அலங்கார வளைவை உடைத்தவர்களை கைது செய்ய உத்தரவு!

0

கடந்த 3ம் திகதி மன்னார் திருக்கேதீச்சர ஆலய சிவராத்திரி அலங்கார வளைவை பிரதேச கத்தோலிக்கர்கள் ஒன்று திரண்டு, அடித்து உடைத்தனர்.

அந்த இடத்தில் பாதிரியார்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த அநாகரிக செயலுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுப்பப்பட்டது.

இந்த வழக்கு மன்னார் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன்போது, தற்காலிக வளைவை அமைக்க நீதிமன்றம் அனுமதித்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் சிவராத்திரி அலங்கார வளைவை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்யும்படி மன்னார் நீதிவான் நேற்று (8) உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.