திருக்கேதீஸ்வர ஆலய அலங்கார நுழைவாயில் உடைப்பு !வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

0

மன்னார் – மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைப்பு தொடர்பான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர்கள் 10 பேர் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர். அவர்களிடம் விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா, குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜுன் மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதேவேளை இன்றைய விசாரணைகளின்போது கத்தோலிக்க அருட்தந்தையர்கள், மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் நீதிமன்ற பகுதிக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.