தென்சென்னையில் பவர்ஸ்டார் போட்டி! திண்டாடும் வேட்பாளர்கள்!!

0

அரசியல் களத்தில், தேர்தல் நேரத்தில் காமெடி செய்வதற்கென்றே  சிலர் உள்ளனர்.  ஜெ.தீபா, டி.ராஜேந்தர், மன்சூரலிகான், கார்த்திக், விஷால் என நீளும் இந்தப் பட்டியலில் பவர் ஸ்டார் சீனிவாசனும் ஒருவர்.

பணமோசடி வழக்கில் தில்லி திஹார் வரை சென்றாலும், சினிமாவில் காமெடியனாகவும் தொடர்பவர் பவர் ஸ்டார்.

 சினிமாவில் சூப்பர் ஸ்டார் மட்டுமே தனது ஒரே எதிரி என்று சொல்லும் அவர், கொஞ்ச காலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் இருந்தார்.

இந் நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னையில் போட்டியிடப் போவதாக பவர் ஸ்டார் அறிவித்துள்ளார். அதுவும் தமிழக கட்சி சார்பில் இல்லை. ராம்தாஸ் அத்வாலே நடத்தும் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயகுமார் மகன் ஜெயவர்தனும், திமுக சார்பில் தமிழச்சி தங்கப் பாண்டியனும், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.