தெருச்சண்டியன் ஆகும் ஆளுநர் சுரேன் ராகவன்!

0

போர் முடிவுக்கு வந்த தேசத்தில் பூச்சியத்திலிருந்து ஒருவர் ஒரு தொழில் தொடங்கி சமூகத்தில் நன் மதிப்பு பெற்று ஒரு நிலைக்கு வரும் போது, தன்னுடைய தனிப்பட்ட விளம்பரத்துக்காக அந்த வியாபாரத்தை இல்லாமல் செய்து கடனாளியாக்க முயன்றிருக்கிறது ஒரு கூட்டம்.

வடக்கில் உடனடியாக செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்க, தெருச் சண்டியன் ரேஞ்சுக்கு கிளிநொச்சியில் இறங்கியிருக்கிறார் ஆளுநர்.

Image may contain: house, tree and outdoor

படித்தவர், உலக அனுபவமும் பெற்ற ஆளுநர் என பதவியேற்றவுடன் புகழ்ந்து தள்ளின ஊடகங்கள். ஆனால், இந்த ஒரு சம்பவம் அவரது கீழ்மைத்தனத்தை வெளிக்காட்டி விட்டது.

உணவகங்களை சீரிய முறையில் கண்காணித்து சுகாதாரக் குறைவு எனில் எச்சரிக்க வேண்டியது அந்தப் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகரின் கடமை. அதனை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அங்கே ஜின்ஜக் போட ஆளுனருக்கு என்ன தேவை?

அவர் கடையை சுகாதார குறைவாக வைத்திருந்தால் சுகாதார பரிசோதகர்கள் சென்று ஆய்வுகள் செய்து அதன் அடிப்படையில் உணவில் புழு இருந்தது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுத்திருந்தால் அது வரவேற்கத்தக்கதே. வெறுமனே உணவுப்பார்சலில் புழு இருந்தது எனக்கூறி வாய்மொழி முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவு பெற்று மூடுவதென்பது சரியானதாக படவில்லை.

இன்று எல்லோருக்கும் ஒரு வியாபாரம் தொடங்குவதும் அது நல்ல நிலைக்கு வரும் போது வங்கியில் பெற்ற கடன்கள், வேறு நிறுவனங்களில் இருந்து பெறும் பொருட்களுக்கு காசோலைகளை வழங்கும் போது நிறுவனம் தொடர்ந்து இயங்க வேண்டியது அவசியம்.

ஓரிரு நாள் கடையை பூட்டினாலே காசோலைகள் செல்லுபடியற்றதாகி நிறுவனம் பெரும் நட்டமடைந்து நிரந்தரமாக மூடும் நிலைமைக்கு கொண்டு சென்று விடும் என்பதை ஏ.சி பஜிரோவில் பொலிஸ் பந்தோபஸ்துடன் வந்திறங்கும் ஆளுநருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Image may contain: indoor and food

மிகத்தரமான சமையல் கூடத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகள் நியாயமான விலைக்கு அங்கே கிடைப்பதாகவும் பாரதி உணவக உரிமையாளர் எப்படியெல்லாம் நேர்மையுடனும் இலட்சியத்துடனும் கஷ்டப்பட்டு முன்னேறினார் என்பதனை வியப்புடன் கிளிநொச்சி நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.

பூச்சியத்திலிருந்து படிப்படியாக பல்வேறு தொழில்கள் செய்து முன்னேறிய ஒருவரின் சுயதொழில் முயற்சி தடைப்பட்டு விடக் கூடாது.

ஒரு நாளைக்கு பல ஆயிரங்களில் வர்த்தகம் நடக்கும் ஒரு கடைக்கே இந்நிலை என்றால் எம் பிரதேசங்களில் இனி பெரும் முதலீடுகளை போட யாரும் யோசிப்பார்கள். ஏனெனில் அதிகாரத்தை பாவித்து யாரும் எதுவும் செய்ய முடியுமான ஒரு தேசத்தில் நீதியை எப்படி எதிர்பார்ப்பது.

பாரதி உணவகம் கிளிநொச்சி மண்ணின் அடையாளம். அது மீண்டும் தழைத்தோங்க வேண்டும்.

#We_Support_Barathi

#Barathi #Star #Hotel #kilinochchi

#dr #suren #rāghavan #governor #northern #province

Leave A Reply

Your email address will not be published.