நாடு முழுவதும் மகளிர் தின சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு!

0

மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்படாகி செய்யப்பட்டுள்ளதுடன் மகளிர் தின பிரதான வைபவம் அனுரதாபுரம் சல்காது மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

திறன்மிக்க பெண்மணியும் அழகான உலகமும் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொள்வார்.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மகளிர் அலுவல்கள் அமைச்சர் சந்திராணி பண்டார ஆகியோரும் பங்கேற்பார்கள்.

தேசிய மகளிர் தின நிகழ்ச்சியை ஒட்டியதாக அனுராதபுரம் சல்காது மைதானத்தில் வர்த்தக கண்காட்சி ஏற்படாகி உள்ளது.

இதில் பெண்களது உற்பத்தி பொருட்கள் அடங்கிய நூற்றுக்கு மேற்பட்ட விற்பனை கூடங்கள் அமைந்திருக்கும்.

பெண்களுக்காக விசேட மருத்துவ முகாமும் இடம்பெறும். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடாகி உள்ளன.

அலுவலக ரயில்களில் மகளிர் மட்டும் என்ற பெட்டியொன்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி வெயங்கொடரயில் நிலையத்தில் இடம்பெறும்.

அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பிரதம அதிதியாக கலந்து கொள்வார்

Leave A Reply

Your email address will not be published.