நானும் சவுக்கிதார் தான்… பாஜகவினரை அதிர வைத்த வாட்ச்மேன் பட போஸ்டர்!

0

சர்வம் தாள மையம் படத்தினை தொடர்ந்து நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குகார் வாட்ச்மேன் படத்தில் நடித்துள்ளார். விஜய் இயக்கும் இந்தப் படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான வாட்ச்மேன் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தின் புது போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நாய் ஒன்று வாயில் அட்டையை கவ்விக் கொண்டு நிற்கிறது. அந்த அட்டையில் ‘நானும் சவுக்கிதார்’ தான் என்ற வாசகம் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது. 

சவுக்கிதார் என்பதற்கு பாதுகாவலன் என்று பொருள். ஊழலை அழிக்கும் அனைவருமே பாதுகாவலர்கள் தான் என குறிப்பிட்ட பிரதமர் மோடி ட்விட்டர் கணக்கில் தன்னுடைய பெயருடன் சவுக்கிதார் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார். அவரை தொடர்ந்து அமித்ஷா, தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் பலரும் தங்களுடைய பெயரை சவுக்கிதார் என ட்விட்டரில் மாற்றிக் கொண்டனர். 

இந்நிலையில் இதுபோன்ற வாசகங்களுடன் வெளியாகியுள்ள வாட்ச்மேன் திரைப்பட போஸ்டர் பாஜகவினரை அதிர வைத்துள்ளது. ஆனால் நெட்டிசன்கள் மத்தியில் இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.