நாளை மறுதினம் மஹிந்த – ஜேவிபி முக்கிய கலந்துரையாடல்!

0

எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நாளை மறுதினம் (06) பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பிலேயே கலந்துரையாடல் அமையவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தான் விருப்பம் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

மக்களின் எதிர்பார்ப்பும் இதனை நீக்க வேண்டும் என்பதே எனவும் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.

இதனையே அவர் 2005 இலும் 2010 இலும் கூறினார். இந்த முறைமையை நீக்கும் பிரேரணையை பாராளுமன்றத்தில் நாம் 20 ஆவது திருத்தமாக முன்வைக்கவுள்ளோம்.

இது குறித்தே நாம் எதிர்க் கட்சித் தலைவருடன் கலந்துரையாடவுள்ளோம் எனவும் விஜித ஹேரத் எம்.பி. மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.