நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில் துப்பாக்கிச்சூடு!

0

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள டிராம் நிலையத்திற்கு அருகே உள்ள சதுக்கத்தில் 24 அக்டோபர்ப்ளேன் ஜங்ஷன் என்ற இடத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிதாரி சம்பவ இடத்தில் இருந்து காரில் தப்பிச் சென்றதாக அந்நாட்டு பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு நேரப்படி காலை 10:45 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும், சம்பவ இடத்திற்கு மூன்று ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

“ஒரு நபர் துப்பாக்கியை எடுத்து கொடூரமாக சுடத் தொடங்கினார்” என சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நகரம் முழுவதும், டிராம் சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக யூட்ரெக்ட் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.