புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களுக்கு கருணாஸ் விடுத்த வேண்டுகோள் !

0

தமிழகத்தில் இன்று நேற்று அல்ல பல வருடங்களாகவே இலங்கையினுடைய பிரச்சினைகள் அரசியல் பார்வையாகவே தான் பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் இதனை தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் 40ஆவது ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட அவர் அங்கு இலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இன்றைக்கு தமிழருக்கான நீதி உலக அரங்கில் எடுத்து செல்லப்படுவதற்கான ஒரு முக்கிய களமாகா நான் இந்த ஐ.நா மன்றத்தை பார்க்கின்றேன்.

இலங்கையினுடைய பிரச்சினைகள் தமிழகத்தில் இன்று நேற்று அல்ல பல வருடங்களாகவே அரசியல் பார்வையாகவே தான் பார்க்கப்படுகின்றது என்பது தான் வெளிச்சமான உண்மை.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை நேரடியாக கிளிநொச்சியில் சந்தித்து விட்டு தமிழக சட்ட மன்றத்திலே சபாநாயகருடைய அனுமதியோடு, நமது உறவுகள் அங்கு திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கின்றது, ஒரு இனப் படுகொலை நடந்தேறி இருக்கின்றது, விசாரணைக்கென்று அழைத்து செல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்,

அவர்களுடைய குழந்தைகள், கணவன்மார்கள் பிள்ளைகள் எல்லாம் காணாமல் அவர்கள் இறந்தார்களா? இருக்கிறார்களா? என்பது தெரியாமலேயே 500 நாட்களை கடந்து அவர்கள் உண்ணாவிரதம் இருந்துகொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே உடனடியாக தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இந்திய அரசிற்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து இலங்கைக்கு ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நான் கூறியுள்ளேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.