பொள்ளாச்சியைப் அடுத்து சேலத்திலும் 100 கும் அதிகமான பெண்கைளை வன்புணர்வு செய்த கும்பல் !

0

பொள்ளாச்சியைப் போல சேலத்திலும் பெண்களை சூறையாடி பாலியல் வன்முறையை அரங்கேற்றிய கும்பல் பொலிஸாரிடம் பிடிபட்டுள்ளது.

சேலம் கொண்டாரம் பட்டியில் இரவு நேரத்தில் தனியே செல்லும் பெண்களை குறிவைத்து செயற்பட்டுள்ள குறித்த கும்பல் நூற்றுக்கும் அதிகமாக பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியிருப்பது பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 22ஆம் திகதி அஸ்தம்பட்டியைச் சேர்ந்த மோகனசுந்தரம் என்பவர் இரவு 10 மணியளவில், தனது காதலியை அழைத்துக்கொண்டு கொண்டலாம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வாகனத்தை நிறுத்தி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

அச்சமயத்தில் 4 பேர் கொண்ட மர்மக் கும்பல் கத்திமுனையில் அவர்களை மிரட்டியதோடு அவர்களிடம் இருந்த நகைகளை பறித்துள்ளனர். அதுமட்டுமல்லாது அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை காண்பித்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையடுத்து, கொண்டலாம்பட்டி பொலிஸில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு கொடுத்துள்ளார். அதன்படி 25பேரிடம் நடத்திய விசாரணையில் 4 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

அவ்வகையில், கொண்டலாம்பட்டி அருகில் உள்ள பெரிய புதூர் கிராமத்தில் உள்ள தினேஷ், மணிகண்டன், சுபாஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொண்டலாம்பட்டி மேம்பாலம் பகுதியில் தனிமையில் வரும் காதலர்களை மிரட்டி நகைகளை பறிப்பது மட்டுமல்லாமல் அவர்களை ஆபாசப்படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுவரை 90க்கும் மேற்பட்ட பெண்களை இதுபோன்று வன்கொடுமை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். பொள்ளாச்சியில் நேர்ந்த கொடூரத்தையடுத்து, சேலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.