பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட நாகராஜ் அதிமுகவில் இருந்து நீக்கம்

0

பொள்ளாச்சியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நாகராஜை கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்வதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட நாகராஜ் அதிமுகவில் இருந்து நீக்கம்பொள்ளாச்சியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நாகராஜை கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்வதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முகநூல் மூலம் கல்லூாி, பள்ளி மாணவிகள், இளம் பெண்களை தொடா்புகொள்ளும் மா்ம கும்பல் அவா்களிடம் நட்புணா்வுடன் பழகி அவா்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளது. இது தொடா்பாக பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவா் காவல் நிலையத்தில் புகாா் அளித்த நிலையில் இது தொடா்பாக நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 

திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமாா் ஆகிய நான்குபோ் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பாலியல் வன்கொடுமை குறித்து புகாா் அளித்த இளம் பெண்ணை மிரட்டி, தாக்கியதாக நாகராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டாா். 

View image on Twitter

View image on Twitter

கைது செய்யப்பட்ட நாகராஜ் அதிமுகவில் பொறுப்பு வகித்து வந்த நிலையில் தற்போது அவரை அடிப்படை உறுப்பினா் உள்பட கட்சியின் அனைத்து வகையான பொறுப்புகளில் இருந்தும் விடுவிப்பதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணைஒருங்கிணைப்பாளா் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தொிவித்துள்ளனா். 

Leave A Reply

Your email address will not be published.