மகிந்த தொலை்லை தீர்ந்தது! திருப்பதியில் ரணில் நிறைவேற்றிய நேர்த்திக்கடன்!

0

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளார்.

நேற்று மாலை திருப்பதிக்கு சென்ற பிரதமர், அவரது பாரியார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்துள்ளார்.

இன்று அதிகாலை சுவாமி தரிசனத்திற்காக ஏழுமலையான் ஆலய முன் வாசல் வழியாக சென்ற அவரை தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றுள்ளனர்.

சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு மலையானை தரிசிக்க அவருக்கு கோவிலிலுள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான உயர் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

Leave A Reply

Your email address will not be published.