மட்டக்களப்பு வைத்தியசாலையில் இன அழிப்பு நடக்கிறதா? நடந்தது என்ன?

0

இலங்கையில் வைத்தியசாலைகளில் நடைபெறும் கொலைகளுக்கு சட்டநடவடிக்கை மூலம் சுகதார சேவை உத்தியோகத்தர்கள் பதவிகள் பறிக்காதது ஏன்???? (மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சம்பவம் அணைத்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை)

இலங்கையில் கிழக்கு மாகாண மக்களுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மருத்துவ மாணவர் ,தாதிய மாணவர்,தாதிய பட்டப்படிப்பு மாணவர்களின் பயிற்சி பெறும் இடமாக உள்ளதற்கு அமைய அணைத்து வசதி கொண்ட வைத்தியசாலையாக இயங்குகின்றது, இந்தளவுக்கு மிக முக்கியமான வைத்தியசாலையில் கொலைகள் இங்குள்ள உத்தியோகத்தர்களின் கவனயீனத்தால் நடைபெறுவதும் அதற்கு தண்டனை பெற்று வேலையை விட்டு நிறுத்திய சம்பவம் மிக குறைவு.

Image may contain: 7 people, people smiling, people standing and child

காரணம் என்ன,????மருத்துவ விடுதியில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு சகல சிகிச்சைகளையும் பார்வையிடும் நேரத்தை எழுத்து மூலம் குறிக்கும் டிக்கட் சாதாரண ஆங்கிலம் படித்த எம்மை போன்ற மக்களுக்கு தெரியாதளவு மெடிக்கல் ஆங்கில குறியீடால் எழுதுவார்கள் வைத்தியர்கள் இப்படி நோயாளி பற்றி எதுவும் தவறு தாம் பார்வையிடும் நேரம் மருந்துகள் வழங்கி உயிரிழந்தால் அதில் இடையில் சொருகி தமது தவறுகளை மறைத்து விடுவார்கள் .இந்த துணிச்சலால்தான் பல நோயாளிகளை கொலை செய்தாலும் தங்களது தறில்லை என சொல்லி மறைத்து மேதாவித்தனமாக மெடிக்கல் இங்கிலிசால் சாதாரண கிராம மக்களிடம் சொல்லி நாம் அவர்கள் வாயை பார்த்து பயத்தில் ஒத்துகொண்டு போவது வழமை ,இதுதான் தொடர்ச்சியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிகழ்கின்றது,கடந்த வருடம் களுதாவளை ஆசிரியை காதுவலி என சென்றவர் கொலை செய்யப்பட்டார் அவர் மகள் கூட விரிவுரையாளராகயிருந்தும் அவருக்கும் வழமையாக எல்லோரும் பேசும் இங்கிலிஸ்தானே தெரியும் அவரிடமும் மெடிக்கல் இங்கிலிஸ் பேசி வாயை மூட வைத்தார்கள் .அதே போல் மகிழடித்தீவு கர்ப்பணி தாய் கொலை இருமாதம் முன் பாம்பு தீண்டி சென்ற ஓசானம் நிலைய பாதிரியார் கொலை இப்பொழுது வந்தாறுமூலை சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளான் ,அவன் பெற்றோரிடமும் இதுபற்றி வினாவிய போது ஏதோ டஸ் புஸ் மெடிக்கல் இங்கிலிசான சில விளட் ரான்பியுசன் ,கிட்னி பெயிலியர் என சொல்லி நியாயப்படுத்தியுள்ளார்கள் இந்த கிராமத்து பெற்றோர் முளிமுளித்துக்கொண்டிருந்தார்கள் இறுதியில் உங்க சிறுவன் மரணமடைந்த என்று கூட சொல்லாமல் டெத் ஆகி விட்டான் ..இதுதான் ஜதார்த்தமாகும் .

Image may contain: one or more people, people sitting, flower, food and indoor

மீண்டும் ஒரு வழியாக பெற்றோர் சாதாரணமாக அறிந்து எமக்கு இவ் மரணம் பற்றி தெரிவித்தது,

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த ஜெயக்காந்தன் விதுலஷ்சன் (9 வயது) கடந்த முதலாம் திகதி விபத்தில் காயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன்போது அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து குணமடைந்து வந்த சிறுவன், மீண்டும் நோய்வாய்ப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர். இதன்போது சிறுவனின் கிட்னி பகுதியில் கசிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 17ஆம் சிறுவன் அசைவற்று காணப்பட்டதை அவதானித்த பெற்றோர், வைத்தியர்களிடம் இது தொடர்பில் தெரிவித்துள்னர், இதன்போதே குறித்த சிறுவனுக்கு தவறான முறையில் இரத்தம் ஏற்றப்பட்டதை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Image may contain: 1 person, standing, tree, outdoor and nature

மேலும் இரத்தம் மாற்றி ஏற்றியதாலேயே கிட்னி இரண்டும் பாதிக்கப்பட்டதாக வைத்தியர் தம்மிடம் கூறியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக தெரிவித்த சிறுவனின் தந்தை, “மகனுக்கு இரத்தம் ஏற்ற வேண்டிய தேவை இல்லாத போதிலும் அந்த பெண் வைத்தியர் வேறு நோயாளிக்கு ஏற்ற வேண்டிய இரத்தத்தை எனது மகனுக்கு ஏற்றியுள்ளார். இதனால் எனது மகன் கிட்ணி பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர், இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் எனது மகன் மரணித்துள்ளதாகவும் விபத்தால் மரணிக்கவில்லை என்றும் பொலிஸாரிடம் அறிக்கை வழங்கியுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

பயிலுனர்களாக வரும் வைத்தியர்களாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. எனவே எனது மகனுக்கு நீதிவேண்டும். பிழை செய்தோர் தண்டிக்கப்படவேண்டும்” என அவர் சிறுவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.