மதுஷின் நெறிப்படுத்தலில் கொள்ளையிடப்பட்ட 500 கோடி பெறுமதியான வைரம் மீட்பு!

0

கடந்த நவம்பர் மாதம் எரவ்வல பகுதியில் கொள்ளையிடப்பட்டதாக சந்தேகிக்கும் 500 கோடி ரூபா பெறுமதியான வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேலியகொட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் குறித்த 500 கோடி ரூபா பெறுமதியான வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பிடிகல பகுதியில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் குறித்த வைரம் பாணந்துறை, கெசல்வத்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிடிகல, கொடாமுல் பகுதியை சேர்ந்த கெலும் இந்திக சம்பத் எனும் நெலமா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் வீட்டில் இருந்த 150 இலட்சம் ரூபா பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் மாக்கந்துர மதுஷின் நெருங்கிய சகா ஆவார்.

இதேவேளை, இந்த இரத்தினக்கல் கொள்ளையை டுபாயில் இருந்தபடி மதுஷே வழிநடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.